‘கோச்சடையான்‘ படத்தைப் பார்த்த பிறகு சிம்பு படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என ட்வீட் செய்தார். அதற்கு சௌந்தர்யாவும் தங்களது கருத்துக்கு நன்றி என பதிலளித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் சௌந்தர்யா கலந்து கொண்டார். அப்போது அவரிடம், ‘சிம்பு கிட்ட நீங்க ஒரு பத்திரிகையாளரா இருந்தா என்ன கேப்பீங்க’ என்று கேட்ட போது, அதற்கு சௌந்தர்யா ‘தயவு செஞ்சு பாடாத சிம்பு’ன்னு கேப்பேன் என பதிலளித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்கள் கடந்த சில நாட்களாகவே ஒளிபரப்பப்பட்டு வந்ததால் கோபமடைந்த சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களைக் காட்டமாக பதிவு செய்து வருகிறார்கள்.
டிவியில் வரும் குழந்தைகள் நிகழ்ச்சியான ‘சோட்டா பீம்’ அனிமேஷன் கூட கோச்சடையானை விட சிறப்பாக இருக்கிறது. சிம்பு பல திறமைகளைக் கொண்ட ஒரு கலைஞர். அதைப் பலரும் அங்கீகரிக்கிறார்கள். தனுஷை விட அவர் சிறந்த பாடகராக இருப்பது சௌந்தர்யாவுக்குப் பிடிக்கவில்லை,என்றெல்லாம் பல்வேறு விதமாக எழுதி வருகிறார்கள். சில ரசிகர்கள் சௌந்தர்யாவைப் பற்றி மோசமான கமெண்ட் எல்லாம் போட்டிருக்கிறார்கள்.உடனடியாக இப்படித் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள். ஒவ்வொருத்தருக்கும் மற்றவர்களைப் பற்றி கமெண்ட் அடிக்க உரிமை உண்டு,என ரசிகர்களிடம் சிம்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்தும்,சிம்பு சிறு வயது முதலே எனது நெருங்கிய நண்பர். நான் சொன்னதெல்லாம் சும்மா ஜாலியான விஷயம். எங்களுக்குள்ள எந்த விதமான நெருக்கடியும் இல்லை,என கூறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி