இவர் தற்போது நடித்து வரும் பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து வருகிறார். அதில் 6 வேடங்கள் ஆண் வேடம். பிச்சைக்காரர், டப்பா வாலா, மயிலாப்பூர் மாமி, இஸ்லாமிய இளைஞன், பஞ்சாப் சிங், ஜோதிடர் என பல வேடங்கள் போடுகிறார்.
நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். கமல், தசாவதாரத்தில் 10 வேடத்தில் நடித்து அந்த சாதனையை முறியடித்தார். இப்போது வித்யாபாலன் இந்தப் படத்தில் 12 வேடங்களில் நடித்து கமலின் சாதனையை முறியடிக்கிறார். இதில் வித்யாபாலனுடன், அலி பைசல், கிரண்குமார், அர்ஜான் பாஜ்வா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமர் சைஷ் இயக்கும் இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகிறது. ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி