சென்னை:-பாலா அடுத்து இயக்க இருக்கும் படம் தாரை தப்பட்டை.இதில் சசிகுமார் தவில் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்கிறார். இதற்காக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் துவங்குகிறது.
இந்தப் படத்தில் பாலா, தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேசை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்.கரகாட்டக்காரி வரலட்சுமியை அடையத் துடிக்கும் கிராமத்து சண்டியராக நடிக்கிறார். இதற்காக நீண்ட தாடி வளர்த்து வருகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் நடிப்பதை சலீம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலா அறிவித்தார். இதுவரை தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராவும் இருக்கும் சுரேஷ் எனது அடுத்த படத்தின் மூலம் நடிகராகிறார்.என்றார் பாலா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி