மோனிகா கூறும் போது இஸ்லாம் கொள்கைகள் பிடித்ததால் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டேன் என் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டுள்ளேன் என்றார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். மோனிகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த வருடத்துக்குள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார்.இது போல் நடிகர் ஜெய்யும் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இவர் சென்னை28 படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜாராணி உள்பட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வடகறி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களில் நடித்துள்ளார். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் இந்து இளைஞராக வருகிறார்.இந்த படம் முஸ்லிம் மத கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜெய் முஸ்லிம் மதத்துக்கு மாறியதை குடும்பத்தினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.யுவன் சங்கர் ராஜா கடந்த பிப்ரவரி மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இஸ்லாம் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு மதம் மாறியதாக அறிவித்தார். ஏ.ஆர். ரகுமானை பின்பற்றி அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது. யுவன் மதம் மாறியதில் அவரது தந்தை இளையராஜாவுக்கு உடன்பாடு இல்லை என கூறப்பட்டது.
ஆனால் யுவன் சங்கர் ராஜா, இதனை மறுத்தார். என் முடிவை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்றார். ஜெய்யும், யுவன் சங்கர் ராஜாவும் பெயரை மாற்ற ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி