சென்னை:-தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாளினை முன்னிட்டு உலகமெங்கிலும் உள்ள தி.மு.க.வினரும், பொது மக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை குறுஞ்செய்தி வாயிலாகவும், இணைய தளத்தின் வாயிலாகவும் தெரிவித்திட, புதிய மென்பொருள் முறையில் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் மொபைலில் DMK space தங்கள் வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்து 54242 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் எளிய முறையில் வாழ்த்து தெரிவிக்கலாம்.இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் www.kalaignarkarunanidhi.com என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் தங்கள் வாழ்த்து செய்தியினை பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இத்தொழில்நுட்பத்தை கருணாநிதி பார்வையிட்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி