செய்திகள் ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!… post thumbnail image
ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அன்னக்கொடியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.இதை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் அன்னக்கொடி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை வழி மறித்து ஆசிரியர் சந்திரசேகர் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி