இதில் விஷால் காரில் மற்றொரு காரை முந்திச்செல்வது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக ஆனைமலை– உடுமலை சாலை முற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல படக்குழுவினர் அனுமதிக்கவில்லை.
இதை அறிந்த அந்த பகுதி கவுன்சிலர் படக்குழுவினரிடம் சென்று உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று கேட்டார். கவுன்சிலர் மற்றும் பொதுமக்களை படக்குழுவினர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுன்சிலர் பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டார்.அதற்கு செயல் அலுவலர் படப்பிடிப்புக்கான எந்த அனுமதியும் யாரும் வாங்கவில்லை என்று கூறினார். பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அனுமதியில்லாமல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது. கண்டிப்பாக பொது மக்களையும் மிரட்டக்கூடாது என்று எச்சரித்தனர்.
பின்னர் இங்கு படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு வசூலிக்கப்படும் ரூ.2500 பணத்தையும் அனுமதியில்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டதால் ரூ.2500 அபராதத்தையும் வசூலித்தனர்.
இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி