எந்திரனுக்குப்பிறகு மீண்டும் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பது சந்தானத்திற்கு பெரிய எனர்ஜியாக உள்ளது.எந்திரனில் ரஜினியுடன் பெரிய அளவில் காமெடி பண்ண சான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால், இந்த லிங்காவிலோ ரஜினியின் நண்பராக படம் முழுக்க அவருடன் வருகிறாராம்.ஏற்கனவே ரஜினியும் காமெடியாக நடிப்பதில் வல்லவர் என்பதால் இரண்டு பேரும் சேர்ந்து காமெடியில் கலக்கி எடுக்கப்போகிறார்களாம். விரைவில் நடைபெறவிருக்கும் லிங்கா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நடிக்கவிருக்கும் சந்தானம் அப்படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் காமெடி டயலாக்குகளை எழுதுவதில் சிறந்தவர் என்றபோதிலும் தனது பங்குக்கும் சில பஞ்ச் டயலாக்குகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம்.
அதை படத்தில் பயன்படுத்திக்கொள்ள ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் ஓ.கே சொல்லிவிட்டால் இளவட்ட ஹீரோக்களுடன் கலக்குவது போன்று ரஜினியுடனும் காமெடி காட்சிகளில் கலக்கல் பண்ணுவாராம் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி