இந்த செய்தியை உறுதி செய்த லட்சுமிராய் மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது தனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது என்றார். தாங்கள் இருவரும் ஒரு அதிர்ஷ்ட ஜோடியாக மலையாளத்தில் கருதப்படுவதாகவும் லட்சுமி கூறினார். முதலில் காதலியாகவும் பின்னர் மனைவியாகவும் வரும் தன்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சில இடங்களில் மம்மூட்டியைவிடவே தனக்கு ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நடித்துவரும் ‘இரும்புக் குதிரை’ பற்றி கூறுகையில், இந்தப் படத்தின் பெரும்பகுதி பாண்டிச்சேரி சாலைகளில் எடுக்கப்பட்டது என்றார். கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்ததால் வெயிலின் தாக்கம் தன்னை சுட்டெரித்தது என்றும் லட்சுமி கூறினார். இந்தப் படத்திற்கான விளம்பரப் பாடல் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளதாகத் திரைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி