இப்படத்தில் நஸ்ருதீன் ஷா, ஓம் புரி,அனுபம் கேர்,ஷாக்கி செராப் ஆகியோர் நடித்து உள்ளனர்.கே.சி.பொகாடியா இயக்கத்தில் தயாராகி உள்ளபடம் டர்ட்டி இந்த படத்தின் கதை பன்வாரிதேவி என்ற செக்ஸ் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.பன்வாரி தேவி என்ற பாலியல் தொழிலாளி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அரசியல்வாதிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்தவர்.
இந்த கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கபட்டுள்ள திரைப்படம்தான் டர்ட்டி பாலிடிக்ஸ். இந்த படத்தின் போஸ்டரில் அரசியல்வாதியின் கார் ஒன்றின் டாப் ஒன்றில் படுகவர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் மல்லிகா ஷெராவத் கையில் சிடி கேசட் ஒன்றை வைத்துள்ளார். பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் உள்ளது. தேசிய கொடியின் நிறத்தில் ஆடையை ஆபாசமாக உடுத்தி உள்ளார். ராஜஸ்தான் சட்டசபையையும் அவர் அசிங்கப்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மல்லிகாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி