செய்திகள்,திரையுலகம் அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…

அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…

அப்சரஸ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ்.நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும் பெண்களும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

ஒருநாள் சந்தோஷ் சிவனின் தோட்டத்தில் நித்யா மேனன் பூக்களை பறிக்கிறார். அதேபோல் மறுநாள் பூக்களை பறிக்கும் நித்யா மேனனை சந்தோஷ் சிவன் பார்த்து அவருடைய வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு முதல்நாள் பூக்கள் பறித்த காட்சிகளை ஓவியமாக வரைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார் நித்யாமேனன். பிறகு அவரை வைத்து ஓவியம் வரைகிறார் சந்தோஷ் சிவன். ஓவியம் வரைந்து முடிந்தவுடன் நித்யா மேனன் இனிமேல் நான் இங்கு வரமுடியாது என்று வேதனை அடைகிறார். அந்த ஓவியத்தை உலகளவில் நடக்கும் ஓவிய போட்டிக்கு அனுப்பி வெற்றிப் பெறுகிறார். ஆனால் அந்த ஓவியம் வரைய காரணமாக இருந்த நித்யா மேனன், சந்தோஷ் சிவன் மீதுள்ள ஒரு ஈர்ப்பால் வேதனை அடைந்து இறந்து விடுகிறார்.

அதன்பிறகு ஒருநாள் சந்தோஷ் சிவன் சாலையில் புகைப்படம் எடுக்கும்போது கார்த்திகாவை சந்திக்கிறார். பின்னர் கார்த்திகா நடனமாடும் போது பார்க்கிறார். அவர்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை வைத்து ஓவியம் வரைய நினைத்து அவரை வீட்டுக்கு வரவழைக்கிறார். அங்கு சந்தோஷ் சிவன், கார்த்திகாவை கற்பனையாக நினைத்து வரைந்து வைத்த பல ஓவியங்களை பார்க்கிறார் கார்த்திகா. அந்த ஓவியங்களில் தன்னை நிர்வாணமாக வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்து போகிறார்.பிறகு சந்தோஷ் சிவனிடம் கோபப்பட்டு ஓவியம் வரைய போஸ் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விடுகிறார். அவரிடம் சந்தோஷ் சிவன் புராண கதைகளைச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். அவரை வைத்து நிர்வாண படமும் வரைகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.இதற்கிடையில் சந்தோஷ் சிவன் வரையும் பெண் தெய்வ படங்கள் தாசி, வேசியை வைத்து எடுக்கப்பட்டவை என்று புகார் எழுகிறது. இறுதியில் சந்தோஷ் சிவன் அந்த புகாரில் இருந்து தப்பினாரா? கார்த்திகாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சந்தோஷ் சிவன், ரவிவர்மன் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார். ஓவியக் கலைஞருக்கான கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறார்.படத்தில் கார்த்திகா, நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா என பல கதாநாயகிகள் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பூர்ணாவிற்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. நித்யாமேனன், மல்லிகா கபூர் ஆகியோர் குறைந்த நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். கார்த்திகா அழகான பறவைபோல் வருகிறார். அனைவரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஓவியம் வரையும் போது நித்யா மேனன், கார்த்திகாவின் முகபாவனைகள் அருமை.
மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இயற்கை அழகை நம் கண்முன்னே கொண்டு வந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தில் காண்பிக்கப்படும் ஓவியங்கள் அழகிறகு அழகு சேர்க்கிறது.ரவிவர்மனின் உண்மைக் கதையை எடுத்துக்கொண்ட இயக்குனர் லெனின் ராஜேந்திரன் அதை திரைக்கதையில் புராணக் கதைகளை புகுத்தியிருப்பது காட்சிகளின் வேகத்தை குறைத்து போல் தோன்றுகிறது. படத்தில் சந்தோஷ் சிவனை தவிர வேறு ஆண்களே படத்தில் இல்லாதபோல் இருக்கிறது. ரசிகர்களை கவர்ச்சியால் ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அப்சரஸ்’ காதல்…….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி