செய்திகள்,திரையுலகம் அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…

அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…

அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் குருசாமி என்ற வர்ஷன் தாதாவாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வருகிறார். சென்னையில் நாயகனின் சித்தப்பாவாக வரும் இமான் அண்ணாச்சியின் சொல்படி ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபர் யானை ஈஸ்வரன் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கிறான்.

இந்த விஷயம் தெரிந்த குருசாமியின் காதலி சானியா தாரா அவனை சிறையில் சந்தித்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டுபிடித்து விடுதலையாக வலியுறுத்துகிறார்.இறுதியில் குருசாமி சிறையிலிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை. கிராமத்திலிருந்து சமூகப் பேராளி தாதாவாக வேண்டும் என்ற கனவோடு வரும் இளைஞனின் வாழ்க்கையை சிரிப்பு நிறைந்தவையாக கூறியுள்ளார் இயக்குனர் திலகராஜன்.பெரியக் காமெடி நடிகர்கள் யாரும் இல்லாமல் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பொன்னம்பலம் மற்றும் சிங்கமுத்து இவர்களை மையமாகக் கொண்டு நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். நாயகன் வர்ஷன் சானியா தாராவை காப்பாற்றும் காட்சிகள் மற்றும் அவ்வபோது அது வேற இது வேற என்று வர்ஷன் போடும் ஆட்டம் போன்றவை ரசிக்கும் தன்மையாக உள்ளது.

ஷகிலா புதுப் பொழிவுடன் கர்ப்புக்கரசிகள் அமைப்புத் தலைவியாக வருகிறார். இப்படி நிறையக் காட்சிகள் வந்தாலும் ஆபாசம் இல்லாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது. தாஜ்நூர் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக இல்லை. மேலும் அதில் வருகின்ற ஐயப்பன் பாடல் அருமையாக உள்ளது.கிளைமாக்ஸ் காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் அனிமேசன் காட்சிகளில் ரவிசங்கரின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற வெறியுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் திலகராஜன்.

மொத்தத்தில் ”அது வேற இது வேற” நகைச்சுவை…….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி