மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் நம்பர்1 காமெடியனாக வலம் வந்தவர் கவுண்டமணி.இவரும் செந்திலும் செய்த காமெடிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

விரைவில் இவர் ஹீரோவாக ரீ-என்ட்ரியாகியுள்ள 49 ஓ படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கவுண்டமணி தனது பிறந்தநாளை தி.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார்.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நேரிலும், போனிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கவுண்டமணி அளித்த சிறப்பு பேட்டியில், படங்கள் பார்த்தே வருடக்கணக்காகிவிட்டது. எப்போதாவது ஆங்கில படங்களின் காமெடி காட்சியை ரசிப்பேன். தினமும் என்னிடம் கதை சொல்ல நிறைய பேர் வருகின்றனர். குறிப்பாக தினம் இரண்டு கதைகள் வரை கேட்கின்றேன்.

ஆனால் கேட்கும் கதைகளில் எல்லாம் நடிப்பது கிடையாது. எனக்கான கதை பிடித்து இருந்தால் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். நல்ல கதைகளுக்காக தொடர்ந்து காத்திருக்கிறேன்.நான் மீடியாக்களில் யாருக்கும் பேட்டி கொடுப்பது கிடையாது. நான் ஒரு பேட்டி கொடுத்தால், அவர்கள் ஒரு செய்தியை போட்டு விடுகிறார்கள்.அதனால் மீடியாக்கள் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது. இருப்பினும் மீடியாக்களின் ஒட்டுமொத்த கேள்விக்கும், 49 ஓ படத்தின் ஆடியோ வெளியீடு நடக்கும்போது பதிலளித்து விடுகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Scroll to Top