செய்திகள்,முதன்மை செய்திகள் சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!

சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!

சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….! post thumbnail image
சிங்கப்பூர் :- சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் ஏற்பட்டன.

இதில் போலீசார் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்ததுடன், பல்வேறு வாகனங்களும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்கனவே 8 இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருப்பையா சந்திரசேகர் (வயது 32) என்ற இந்திய கட்டுமான தொழிலாளிக்கு நேற்று 9 மாத சிறை தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட நீதிபதி யான் சன் உத்தரவிட்டார்.

எனினும் இந்த தண்டனை, கருப்பையா சந்திரசேகர் கைது செய்யப்பட்ட டிசம்பர் 12-ந் தேதிக்கு முன்தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாலும், சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாகவும் அவர் ஜூன் மாத இடையில் நாடு திரும்பலாம் என அவரது வக்கீல் எஸ்.ஜி.கண்ணன் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி