இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் மற்றும் சஞ்சய் லீலா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அருண் தண்டன் மற்றும் ஷாஷ்காந்த் ஆகியோர் மூவரையும் கைது செய்ய தடை விதித்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மூவரும் உறுதியளித்துள்ளதால் கைது நடவடிக்கை தேவையில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிபதிகளின் உத்தரவால் தீபிகா படுகோனே உள்பட மூவரும் கைதில் இருந்து தப்பினர்.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே இயக்குனர் சஞ்சய் லீலா, தன்னுடைய படத்தின் பெயர் இந்துக்களின் மனதை புண்படுத்தியிருந்தால், அந்த படத்தின் பெயரை மாற்றிவிட தயாராக இருப்பதாக மனு ஒன்றை அளித்துள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிடும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி