இந்நிலையில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில், அவருக்கு நான் சிலவற்றை உரிமையாக சொல்வேன்.அவர் ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் போன்று ஆடினார். சமீபத்தில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் அவர்களது விமர்சனம் தவறானது என்பதை நிருபித்து விட்டார். அவரது ஆட்டம் நம்ப முடியாத ஒன்றாகும் இவ்வாறு தெரிவித்தார்.
யுவராஜ் சிங்கின் பேட்டிங் குறித்து விராட் கோலி கூறியதாவது:- யுவராஜ்சிங்கின் எதிர்காலம் குறித்த சந்தேகத்திற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.யுவராஜ் சிங் இது போன்று ஆடுவதை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் மீண்டும் அவர் வலுவாக திரும்பி வந்து விட்டார். அவரை நான் மிகவும் மதிக்கிறேன் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். என தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி