செய்திகள்,திரையுலகம் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்!…

முன்னாள் பிரதமரின் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்!…

முன்னாள் பிரதமரின் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்!… post thumbnail image
சென்னை:-வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன் (60). இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகர் ஆவார்.நடராஜன் என்பவர் வீட்டில் உஷா சங்கர நாராயணன் வாடகைக்கு இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு நாய்கள் மீது பிரியம். நான்கு தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு பயிற்சி கொடுத்து தன்னுடனேயே வைத்துள்ளார்.

உஷா தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் பாஸ்கரன் என்பவர் மனைவி கலையுடன் வசிக்கிறார். அவர்கள் உயர் ரக நாய் வளர்க்கின்றனர். அந்த நாயை பார்த்து உஷா வளர்க்கும் நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு மூண்டது. உஷாவை வீட்டில் இருந்து காலி செய்ய வைக்கும்படி உரிமையாளரை வற்புறுத்தினார்களாம்.
உஷா மற்றும் கலை தங்கி இருக்கும் வீடுகளுக்கு அருகில் நடிகை சங்கீதா கணவர் கிரிஷ்சுடன் வசிக்கிறார். இவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கலைக்கு ஆதரவாக சங்கீதா வந்தாராம். நடுத்தெருவில் சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்சும் தன்னை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக உஷா வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தார். வீட்டை காலி செய்யாவிட்டால் நாய்களை கொன்று விடுவதாக எச்சரித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஐகோர்ட்டுக்கும் சென்றார்.

இதையடுத்து நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், கலை அவரது கணவர் பாஸ்கரன், வீட்டு உரிமையாளர் நடராஜன் மற்றும் அவரது மனைவி மீது வளசரவாக்கம் போலீசார் 294(பி) பொது இடத்தில் அநாகரீகமாக பேசுதல், 506(1) ஆயுதமின்றி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காலையில் நடிகை சங்கீதா வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அங்கு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சங்கீதாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து கேட்டபோது அவர் கூறியதாவது:–

என் மீது புகார் கொடுத்துள்ள உஷாவுக்கு 70 வயது இருக்கும். வயதில் மூத்தவரான அவருக்கு நான் எப்படி கொலை மிரட்டல் விடுப்பேன். எங்கள் தெருவில் வசிக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அவர் வளர்க்கும் நாய்களால் தொல்லை இருந்து கொண்டே வருகிறது. அவரது நாய்கள் எனது வீட்டுக்குள் புகுந்து குழந்தைகளையும் கடிக்க முயன்றன.இதுபற்றி கடந்த பிப்ரவரி மாதம் நான் போலீசிலும் புகார் செய்துள்ளேன். சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் குறிப்பாக மாநகராட்சி கமிஷனரிடம் நானே தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது நாய் தொல்லை குறித்து புகார் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை.இதுபற்றி உஷாவிடம் நானும் தெருவில் வசிக்கும் மற்றவர்களும் கேட்டபோது அவர்தன் எங்களிடம் மிரட்டுவதுபோல பேசினார். அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரது பெயர்களை சொல்லி அவர்களை எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டினார்.

இந்த பிரச்சினைக்கு பின்னர் வீட்டுக்குள் இருந்து கொண்டே என் மீதும், தெருவில் வசிக்கும் மற்றவர்கள் மீதும் நாய்களை ஏவி விட்டு மிரட்டுகிறார். அவரால் நான் மட்டுமின்றி தெருவில் உள்ள அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இந்த பிரச்சினையை நான் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.எனவே உஷா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக புகார் மனு ஒன்றையும் தயாரித்துள்ளேன். அதில் என்னை போன்று பாதிக்கப்பட்ட அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர். எனவே எனது புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி