செய்திகள்,திரையுலகம் பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…

பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…

பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்… post thumbnail image
‘ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா.இவர் முதன்முறையாக ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து டாக்டர் சுஜாதா செந்தில்நாதனுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். புஷ்கர் காயத்ரி, மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹலிதா ஷமீம், இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பட்டாபட்டி’, ‘பட்டய கிளப்பணும் பாண்டியா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த அருள்தேவ் இந்தப்படத்துக்கு இசையமைக்க, ஏர்டெல் சூப்பர் சிங்கரில் கலக்கிய ஆஜித் இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி