கணவருடன் எழுந்த பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்த காவ்யா மாதவன் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் தன்னுடன் மலையாளத்தில் 25 படங்களில் நாயகனாக நடித்த திலீப்புடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதோடு அவரிடம் முன்பை விட அதிக நெருக்கம் காட்டி காவ்யா பழகி வருவதாக கடந்த சில மாதங்களாக மலையாள சினிமா கிசுகிசுத்து வருகிறது.
இதையடுத்து, கடந்த ஒரு வருடமாக தனது மனைவி மஞ்சுவாரியாரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் திலீப் தற்போது விவாகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதனால் விவாகரத்து கிடைத்ததும் அவர் காவ்யாமாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி கேரளாவில் வெளியானபோதும் அதற்கு அவர்கள் இருவருமே இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி