இந்நிலையில், கோச்சடையான் படத்தை வெளியிடும் உரிமையை ஸ்டுடியோக்ரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா வாங்க இருப்பதாகவும் அதனால் திட்டமிட்டபடி மே 23ம் தேதி கோச்சடையான் படம் வெளிவந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். கோச்சடையான் படத்துக்கு பிரச்சனையாக இருப்பது அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான்.
அந்நிறுவனத்தின் கணக்கை முடித்துவிட்டு, விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனத்தின் பெயரை அகற்றிவிட்டால் கோச்சடையான் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதன் பிறகு படத்தை நான் வெளியிடுகிறேன் என்று ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் கூறி இருக்கிறாராம் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா. இதற்கு ஈராஸ் ஒப்புக்கொண்டால் கோச்சடையான் படத்தை ஸ்டுடியோக்ரீன் வெளியிடுமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி