இன்று துவங்கி வருகிற 25ம் தேதி வரை நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் அழைக்கப்பட்டு உள்ளார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவு தலைவராக கமல் பொறுப்பு வகித்து வருகிறார்.கேன்ஸ் பட விழாக்குழு அழைப்பை ஏற்று அவர் நேற்று இரவு பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். கமலுடன் பிலிம்சேம்பர் நிர்வாகிகளும் சென்றனர்.இது குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தயாராகும் மொத்த படங்களில் 60 சதவீதத்துக்கு மேல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு பெருமைகள் கொண்ட கமலஹாசன் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை ஏற்று கேன்ஸ் பட விழாவுக்கு செல்வது மிகவும் சிறப்புக்குரியது என்று கூறியுள்ளது.கமலஹாசன் கூறும் போது, கேன்ஸ் பட விழாவுக்கு செல்லும் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை பொறுப்பு ஏற்று செல்வதை பெருமையாக கருதுகிறேன். இன்றைய இந்திய சினிமா துறை குறித்து அந்த விழாவில் பேச எனக்கு கிடைத்த வாய்ப்பாக இதை கருதுகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி