செய்திகள்,திரையுலகம் ரகசிய இடத்தில் படமாக்கப்படும் அஜித், அனுஷ்கா காட்சிகள்!…

ரகசிய இடத்தில் படமாக்கப்படும் அஜித், அனுஷ்கா காட்சிகள்!…

ரகசிய இடத்தில் படமாக்கப்படும் அஜித், அனுஷ்கா காட்சிகள்!… post thumbnail image
சென்னை:-கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்துக்காக ரகசிய இடத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. பாஹுபாலி ஷூட்டிங்கில் இருந்த அனுஷ்காவுக்கு ஸ்பெஷல் நண்பர் ஒருவர் செல்போனில் அழைக்க திடீரென்று ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து கவுதம் மேனன், அஜித் பட ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தார். கடந்த 3 நாட்களாக பட குழுவில் பலருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தாலும் கேமராமேன் மற்றும் இரண்டொரு லைட்மேன் ஆகியோருடன் ரகசிய இடத்துக்கு கவுதம் மேனன் சென்றார்.
அங்கு அஜித்,அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

ரகசியமாக ஷூட்டிங் நடந்ததற்கு காரணம் கதையின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டதுதான் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அஜித்,அனுஷ்கா இருவரின் நெருக்கமான காட்சியை படமாக்கவே குறைந்த எண்ணிக்கையில் படக்குழுவினருடன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி