உலக அளவில் நிகழும் 20 மரணங்களில் ஒரு மரணம் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, மது குடித்து வன்முறையில் ஈடுபடுவது, அத்துமீறல் மற்றும் பல தரப்பட்ட வியாதிகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பத்து வினாடிகளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் மாறியுள்ளதாக உலக சுகாதார மையத்தின் மன ஆரோக்கிய துறை தலைவரான சேகர் சக்சேனா கூறியுள்ளார்.
இந்தியாவிலும் சீனாவிலும் குறைவான அளவில் மது அருந்தப்படுவதாக இந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளை சேர்ந்தவர்களின் வசதி வாய்ப்புகள் அதிகரித்துவிட்டதால் தற்போது இவர்கள் அதிகமாக குடிக்கத் துவங்கிவிட்டதாகவும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை கூறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி