அதனால்தான் அஞ்சலி திடீரென்று காணாமல் போனபோது போலீசார் ஜெய்யை தொடர்பு கொண்ட விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.அஞ்சலி எங்கு சென்றார் என்று எனக்கு தெரியாது. மேலும், நானும் அவரும் காதலிக்கவிலலை என்றும் மறுத்தார்.
அதையடுத்து ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தில் நஸ்ரியாவுடன் நடித்தபோதும் காதல் கிசுகிசுவில் சிக்கினார் ஜெய். அதற்கு ஜெய் மறுப்பேதும் சொல்லாதபோதும் தமிழ் எனக்கு தெரியாததால் அதுபற்றி அறிந்து கொள்ளத்தான் அவருடன் நெருங்கி பழகினேன். மற்றபடி காதல் எதுவும் இல்லை என்று மறுத்தார் நஸ்ரியா.
அவர்களைத் தொடர்ந்து இப்போது எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படத்தில் இப்போது ஆண்ட்ரியாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜெய். ஏற்கனவே ஆண்ட்ரியா நடித்த பல படங்களைப்பார்த்து அவரது நடிப்பைக்கண்டு வியப்பில் இருந்த ஜெய் அவர் தன்னை முதல் நாள் சந்தித்ததுமே அவரது நடிப்பை ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளி விட்டாராம்.
அதில் உருகிப்போன ஆண்ட்ரியா ஜெய் ஹீரோ என்றதும் பெரிய ஈடுபாடு இல்லாமல் அந்த படத்தில் கமிட்டானவர் இப்போது ஜெய்யுடன் தாராள நெருக்கம் காட்டி நடிக்கிறாராம்.அதில் உருகிப்போன ஜெய், இதுவரை நான் ஜோடி சேர்ந்த நடிகைகளுள் ஆண்ட்ரியாதான் சிறந்த நடிகை . அதோடு எனக்கு பொருத்தமான, அம்சமான நடிகையும்கூட என்று அவரை பெருமைப்படுத்திக்கொண்டு திரிகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி