அந்நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டை முதலில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது.அந்நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பெங்களூரு நீதிமன்றம் முதலில் அதன் மீதான வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் அதே சமயத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என கூறியது.
இதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் லெக்ஸ் நிறுவனம் மீதான விசாரணை முடியும் வரை தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரியிருந்தார்.இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்து அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி