வங்கிக் கடன் பிரச்சனையில் சிக்கியது மீடியா ஒன் குளோபல் நிறுவனம்தான். கோச்சடையான் படத்திற்காக பல கோடிகள் முதலீடு செய்ததோ மும்பையைச் சேர்ந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இவ்விரு நிறுவனங்களும் கோச்சடையான் படத்தைத் தயாரித்திருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நிதி சிக்கலில் மாட்டி இருப்பதால் கோச்சடையான் படத்தின் முதன்மை முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் தாங்களாகவே படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் அடிபடுகிறது.பிரச்சனைகளையும் தாங்களே சுமுகமாக தீர்த்துவிட்டு கோச்சடையான் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி