புதுடெல்லி:-டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரயராக பணிபுரிந்து வரும் ராம் ஜீவன் கோபால் என்பவரை பாலியல் புகாரில்காவல்துறையினர் கைதுசெய்தனர்.
நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தி தனது தாயாரிடம் இதைப்பற்றி கூறிய போது ,அவர் உடனே பள்ளிக்கு சென்று புகார் செய்தார். அதனையடுத்து இந்த ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான அனைத்து மாணவிகளும் புகார் அளிக்க தொடங்கினர்.
புகார் அளித்த 40 சிறுமிகளின் வயது பெரும்பாலும் 13 முதல் 15 வயதிற்குள் தான் இருக்கும்.குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி