மும்பை:-இந்தி சினிமா பின்னணி பாடகர் அங்கித் திவாரி இவருக்கு 24 வயது ஆகிறது. ‘ஆஷிக்குயி 2’ என்ற படத்தில் இவர் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் நிறைய படங்களில் பாடி இருக்கிறார்.
அங்கித்திவாரி மீது ஒரு இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அங்கித் கற்பழித்து விட்டார் என்றும், தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் கூறி இருந்தார்.
போலீசார் அங்கித் திவாரி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தார்கள்.அங்கித்திவாரி வக்கீல் கூறும்போது, அந்த பெண் பணம் பறிக்க திட்டமிட்டார். திவாரி மறுத்ததால் போலீசில் புகார் அளித்துள்ளார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி