1996-ல் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோஸில் தொடங்கப்பட்ட சென்ட்ராய்ட், ‘ஹாரிபாட்டர்’, ‘2012’ மற்றும் பல ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளது. சென்ட்ராய்டின் நிறுவனர் பில் பேசுகையில், சென்ட்ராய்ட் மிக அனுபவம் மிக்க தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளது. கோச்சடையான் திரைப்படத்திற்கு பணிபுரிந்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் எங்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. பிக்சல் கிராப்டுடன் இணைந்து தமிழ் சினிமாவிற்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு வரவுள்ளோம் என்று தெரிவித்தார்.இதுகுறித்து பிக்சர் கிராப்டின் இயக்குனரான சித்தார்த் குமார் பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன.
அவர்களை அதிக அளவில் திரை அரங்குகளுக்கு வரவழைப்பதன் மூலம், திரைப்படங்களுக்கான வெற்றி வாய்ப்பையும், தயாரிப்பாளர்களுக்கான லாபத்தையும் அதிகரிக்கின்றன. சென்ட்ராய்டின் தொழில்நுட்ப உதவியுடன் பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் டிஜிட்டல் திரைப்படங்களுக்கான தயாரிப்பில் ஈடுபடும். தொழில்நுட்பத்தையும் படைப்பாற்றலையும் இணைக்கும் இந்த திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். இதற்கான முதல் படியாக நாங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சில தமிழ் புத்தகங்களின் எழுத்தாளர்களிடம் உரிமத்திற்காக பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய புத்தகங்களை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம். மேலும், தமிழ் திரைப்படத்துறையில் ஏற்கெனவே இருக்கும் தயாரிப்பாளர்களுடன் இணைந்தும் டிஜிட்டல் பட தயாரிப்புகளில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி