சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தை நேற்று உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்தனர். தமிழ் நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாக வில்லை.
இது குறித்து தயாரிப்பு தரப்பில் கூறும் போது தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணத்தால் கோச்சடையான் படம் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
தற்போது படத்தின் டைரக்டர் சவுந்தர்யாவும் தாமதம் ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும் போது, சில தொழில்நுட்ப காரணங்களினால் கோச்சடையான் படத்தை தியேட்டருக்கு 3டியில் மாற்றி குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர முடிய வில்லை.
வருகிற 23ம் தேதி கோச்சடையான ரிலீசாகும். எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி