மணிக்கு நூற்றுக்கணக்கான கி.மீ. வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரெயில் ஆசியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, காற்றழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த ரெயில்கள், மணிக்கு 400 கி.மீ. வேகம் வரை செல்கின்றன. ஆனால், ஜிகாங் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் எதிர்காலத்தில் அதிவேகமான ரெயில்களை இயக்கும் நடவடிக்கையின் ஆரம்பமாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக ஜிகாங் கூறுகையில், “ரெயிலின் வேகத்தை 400 கிலோ மீட்டருக்கும் மேல் அதிகரித்தால், காற்று எதிர்ப்பு காரணமாக 83 சதவீதத்திற்கும் அதிகமான இழுவை ஆற்றல் விரயம் ஆகும். ரெயில் பாதையில் உள்ள வெற்றிடக் குழாயில் கடல் மட்டத்தில் உள்ள சாதாரண வளிமண்டல காற்றழுத்தத்தைவிட 10 மடங்கு குறைவான காற்றழுத்தம் கொடுக்க வேண்டும்.அப்படி செய்தால் அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் வேகத்தை 7 மடங்கு வரை அதிகரிக்க முடியும். இத்தகைய வெற்றிடக்குழாய் போக்குவரத்து முறையை ராணுவ நடவடிக்கைகள் அல்லது விண்கலம் ஏவும் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி