சென்னை:-ஹாலிவுட்டில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் 90களில் ரஹ்மான் இசையமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார்.
என் சுவாச காற்றே என்ற படத்தில் உன்னிகிருஷ்ணன், சித்ரா இணைந்து பாடிய, திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்போல் என்ற பாடல் தான் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்திருக்கிறது.
தமிழில் எவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்டு படத்தில் இடம்பெற்றதோ அதிலிருந்து இசை மற்றும் பாடல் வரிகளில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் தமிழிலேயே இப்பாடல் படத்தில் ஒலிக்கும் என்றார் ரஹ்மான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி