சென்னை:-சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இசை அமைக்கிறார். டி.ராஜேந்தரும், பாண்டிராஜும் இணைந்து தயாரிக்கிறார்கள். சில பிரச்னைகள் காரணமாக இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சிலம்பரசன் நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்தை முதலில் முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் இப்போது அந்தப் படத்தில் தன் முழு கவனத்தையும் சிம்பு செலுத்தி வருகிறார். வாலு படத்திற்கு ஒரு பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிவிட்டால் அந்தப் படத்தின் பணிகள் முடிந்து விடும்.
வாலு பணிகள் முடிந்ததும் சிம்பு, இது நம்ம ஆளு படத்தில் நடிப்பார். ஏற்கெனவே 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மீதமுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்படும்.என டி.ராஜேந்தர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி