சென்னை:-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. விடைத்தாளில் போடப்பட்டுள்ள மதிப்பெண்கள் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்கள் வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது.தற்போது மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு அந்த பணியும் முடிந்துவிட்டது.
தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில்,இயக்குனர் கு.தேவராஜனால் வெளியிடப்பட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி