சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை துவங்கியது. ஆன்லைனிலும் முன்பதிவு நடந்தது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் போட்டிபோட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் நீண்ட ‘கியூ’வில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சில தொழில் நுட்ப காரணங்களால் மே 9ம் தேதி வெளிவாகவிருந்த ‘கோச்சடையான்’ படம் மேலும் தள்ளிப்போவதாக தகவல் வந்துள்ளது. இப்படம் மே 23ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி