இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம் கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிதாக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் மேல் சபை எம்.பிக்களில் ப.சிதம்பரம் ஒருவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கர்நாடக மாநில காங்கிரசுக்கு உத்தரவிட்டுள்ளது.தற்போது கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 46 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் போதும் என்பதால் காங்கிரஸ் சார்பில் 2 மேல் சபை எம்.பிக்களை தேர்வு செய்ய முடியும்.
46 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா சார்பில் ஒரு மேல் சபை எம்.பியை தேர்வு செய்ய முடியும்.காங்கிரசில் மீதம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் வாக்குகளுடன் சேர்த்து தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 40 உறுப்பினர்களிடம் ஆதரவு பெற காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளது. அதன் மூலம் காங்கிரஸ் கட்சி 3 மேல் சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.எனவே காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, தற்போதைய மேல்சபை எம்.பி. ஹரிபிரசாத் ஆகியோர் எம்.பிக்களாக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி