செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்:மீண்டும் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்:மீண்டும் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்:மீண்டும் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!… post thumbnail image
கட்டாக்:-சென்னை- பஞ்சாப் அணிகளுக்கிடையேயான 29வது ஐ.பி.எல். லீக் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.பஞ்சாப் அணியைச் சேர்ந்த சேவாக்,மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சேவாக் பவுண்டரியுடன் தனது ரன் கணக்கை தொடங்கினார். மந்தீப் சிங் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். சேவாக் 23 பந்தில் 30 ரன் எடுத்த நிலையில் ஹில்பெனாஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 38 ரன்னாக இருந்தது. அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்லுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

முதலில் மேக்ஸ்வெல் நிதானமாக விளையாடி வந்தார். இதனால் பஞ்சாப் அணி10வது ஓவரில் அந்த அணி 69 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மேக்ஸ்வெல் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 11-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் இருந்து மேக்ஸ்வெல்லின் ருத்ரதாண்டவம் ஆரம்பமானது. இந்த ஓவரின் 3 மற்றும் 4-வது பந்தில் இமாலய சிக்சர்களை மேக்ஸ்வெல் விளாசினார். அவருக்கு இணையாக மில்லரும் அதிரடி காட்டினார்.இதன் பயனாக 12-வது ஓவரில் பஞ்சாப் அணிக்கு ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி கிடைத்தது. அணியின் ஸ்கோரும் 100 ரன்னைத் தொட்டது. அஸ்வின் வீசிய 13-வது ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விரட்டினார். 14-வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச மில்லர் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். ஜடேஜா வீசிய 15-வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார்.

அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு எடுபடாமல் போகவே 16-வது ஓவரை ஸ்மித்தை வீசுமாறு டோனி அழைத்தார். இந்த ஓவரில் மேக்ஸ்வெல் முதல் 4 பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி ஸ்மித்தின் பந்துகளை துவம்சம் செய்தார். இதில் இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளும் அடங்கும். இந்த ஷாட் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் 47 ரன்கள் எடுத்த மில்லர் போல்டானார். அவர் 32 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்தனர்.அடுத்து மேக்ஸ்வெல்லுடன் பெய்லி களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 90 ரன்களில் மோகித் சர்மா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் 38 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். மேக்ஸ்வெல் கடைசி 27 பந்தில் 78 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.5-வது விக்கெட்டுக்கு பெய்லியுடன் ஜான்சன் சேர்ந்தார். பெய்லியும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் 13 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்களும், ஜான்சன் 6 பந்தில் 2 பவுண்டரியுடன் 11 ரன்னும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இந்த ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணி இரண்டாவது முறையாக 200 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 232 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் சென்னை அணியைச் சேர்ந்த ஸ்மித்- மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பஞ்சாப் வீரர் சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்தை வைடாக அவர் வீசினார். அடுத்த பந்தை ஸ்மித் பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் 4-வது பந்தில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் வெளியேறினார்.அடுத்து மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். முரளி கார்த்திக் வீசிய 5-வது ஓவரில் ரெய்னா 3 பவுண்டரிகள் விளாசினார். 8-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா மேகஸ்வெல் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 27 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார்.அடுத்து மெக்கல்லத்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இவர் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மெக்கல்லத்துடன் டு பிளெசிஸ் ஜோடி சேர்ந்தார். மெக்கல்லம் 33 ரன்னில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அப்போது சென்னை அணி 12 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்திருந்தது. வெற்றி பெற 48 பந்தில் 134 ரன்கள் தேவைப்பட்டது. டு பிளெசிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி வழக்கத்திற்கு மாறாக ஒவ்வொரு ரன்னாக அடிக்க ஆரம்பித்தார். மறுமுனையில் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடினார். ஜான்சன் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் 52 ரன்கள் எடுத்திருந்த டு பிளெசிஸ் அவுட் ஆனார். டோனி அதே ஓவரின் 5-வது பந்தில் 20 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும்.அதன்பின் வந்த அஸ்வின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Sehwag V. b Hilfenhaus B. 30 23 25 5 1 130.43
Singh M. c Pandey I. b Sharma M. 3 8 19 0 0 37.50
Maxwell G. c Jadeja R. b Sharma M. 90 38 59 6 8 236.84
Miller D. A. b Smith D. R. 47 32 48 5 2 146.88
Bailey G. not out 40 13 21 6 2 307.69
Johnson M. not out 11 6 16 2 0 183.33
Extras: (w 5, lb 5) 10
Total: (20 overs) 231 (11.6 runs per over)
Bowler O M R W E/R
Hilfenhaus B. 3.6 0 36 1 10.00
Pandey I. 3.6 1 41 0 11.39
Sharma M. 3.6 0 38 2 10.56
Smith D. R. 2.6 0 36 2 13.85
Jadeja R. 2.6 0 37 0 14.23
Ashwin R. 1.6 0 38 0 23.75

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c Johnson M. b Sharma S. 4 4 4 1 0 100.00
Jadeja R. b Dhawan R. 17 8 16 3 0 212.50
Ashwin R. not out 11 4 7 2 0 275.00
McCullum B. run out Johnson M. 33 29 58 3 0 113.79
Raina S. c Miller D. A. b Maxwell G. 35 27 31 3 1 129.63
Du Plessis F. c Karthik M. b Johnson M. 52 25 33 7 1 208.00
Dhoni M. c Bailey G. b Johnson M. 23 20 29 0 1 115.00
Manhas M. not out 8 3 10 0 1 266.67
Extras: (w 3, lb 1) 4
Total: (19.6 overs) 187 (9.4 runs per over)
Bowler O M R W E/R
Maxwell G. 1.6 0 21 1 13.13
Johnson M. 3.6 0 37 2 10.28
Sharma S. 3.6 0 37 1 10.28
Karthik M. 3.6 0 40 2 11.11
Patel A. 3.6 0 28 0 7.78
Dhawan R. 1.6 0 23 1 14.38

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி