கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே கோலிவுட்டில் உள்ள சில கதாநாயகிகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், புதுமுக நடிகர் சண்முகப்பாண்டியனுடன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அரசியல் வட்டாரமாக உள்ளதே என தென்னிந்திய நடிகைகள் தயங்கி நின்றனர்.இதனால் மும்பையில் நடிகை வேட்டையை நடத்தினர்.
இந்நிலையில் புனேயைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நேற்று சென்னை வந்து ‘சகாப்தம்’ படத்தில் நடிப்பதற்கு அக்ரிமென்டில் சைன் போட்டுள்ளார். நாளை முதல் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து அந்த புனே நடிகை நடிக்கவிருக்கிறார். ஆனால், அந்த நடிகையின் பெயர் என்ன. அவரது புகைப்படம் போன்றவற்றை தற்போதைக்கு சஸ்பென்சாக வைக்க உத்தரவிட்டுள்ளாராம் கேப்டன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி