செய்திகள்,திரையுலகம் மோக மந்திரம் (2014) திரை விமர்சனம்…

மோக மந்திரம் (2014) திரை விமர்சனம்…

மோக மந்திரம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகி மேக்னா நாயுடுவுக்கு தான் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டாவது அடைந்தே ஆகவேண்டும். அதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை சும்மா விடாத குணம் கொண்டவர். தனது தாயை இழந்த இவள் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறாள்.ஒருநாள் விபத்தில் நாயகன் விக்கியை சந்திக்கிறார் மேக்னா. பார்த்தவுடனேயே நாயகன் மீது காதல் வயப்படுகிறாள். எதேச்சையாக மேக்னாவின் வீட்டுக்கே நாயகன் விக்கி குடியேற வருகிறார். தான் விரும்பியவன் தன்னுடைய வீட்டுக்கே வந்துவிட்ட மகிழ்ச்சியில் மேக்னா இருக்கிறாள். எந்நேரமும் அவனைப் பற்றியே யோசித்து வருகிறாள். தனிமையில்

பலமுறை அவனிடம் நெருங்கி தன்னுடைய காதலை கூறுகிறாள். ஆனால், நாயகனோ அவளுடைய காதலை ஏற்க மறுக்கிறான். அதற்கு தன்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை என்று காரணம் கூறுகிறான்.ஒருநாள் தன்னை நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி அவனிடம் மேக்னா முறையிட, விக்கி அதற்கு சம்மதிக்கிறான். இருவரும் ஒருநாள் இரவு வேளையில் வெளியே சென்று வரும்போது மேக்னா தனது திட்டப்படி விக்கியை தனது ஆசைக்கு இணங்க வைக்கிறாள். இருவரும் அன்று இரவு சந்தோஷமாக இருக்கின்றனர்.மறுநாள் மேக்னா, விக்கியுடன் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி முறையிடுகிறாள். ஆனால், விக்கியோ நட்பாகத்தான் பழகினோம். நட்பாகவே பிரிவோம் என்று கூறுகிறான்.

இந்நிலையில், ஒருநாள் இரவு பார்ட்டி ஒன்றில் தன்னுடைய பழைய காதலியை விக்கி பார்க்கிறான். அவள் தான் காதல் கல்யாணம் செய்துகொண்டவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவனிடமிருந்து தான் தப்பித்து வந்துவிட்டதாகவும் கூறுகிறாள். இதைக்கேட்டு மனம் நெகிழும் விக்கி அவளை திருமணம் செய்துகொள்வதாக கூறுகிறான்.ஆனால், இவர்களுடைய திருமணத்துக்கு மேக்னா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். இதை எப்படியும் நடத்தவிட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். இறுதியில், நாயகன் மேக்னாவின் எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.நாயகன் விக்கிக்கு கொஞ்சமும் பொருந்தாத கதாபாத்திரம். காதல், கோபம், ரொமான்ஸ் என எந்தவொரு இடத்திலும் சரியான முகபாவனையை இவரால் கொடுக்கமுடியவில்லை. உடலமைப்பில் மட்டும் கச்சிதமாக இருக்கிறார்.

நாயகி மேக்னா நாயுடு கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுவதும் டூ பீஸ் உடையில் வந்து கிரங்கடிக்கிறார். பாடல்கள் காட்சிகளில் கொஞ்சம் கூடுதலாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.நாயகனின் காதலியாக வருபவரும் நடிப்பில் மிளிர்கிறார். மற்றபடி, படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் ஒருசில காட்சிகளே வந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை.இயக்குனர் தீபக் குமார் கிரங்கடிக்கும் டைட்டிலை படத்திற்கு வைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். மற்றபடி சாதாரண பழிவாங்கும் கதையையே கவர்ச்சி என்ற போர்வையை சுற்றி படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் ரசிக்கும்படியாக எந்தவொரு காட்சியும் இல்லாதது மிகப்பெரிய குறை. கிளைமாக்ஸ் காட்சியை ரொம்பவும் நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார்.
ஷாஜித் வாஜித் இசையில் நாலு பாடல்கள் இருந்தாலும் எந்த பாடலும் கேட்கமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பின்னணி இசையும் ஒரே இரைச்சல்.

மொத்தத்தில் ‘மோக மந்திரம்’ ஒன்றுமில்லை……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி