ராய்கர்:-சத்தீஷ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உள்ள குருகுல கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவர் சுவாமி ராமானந்த் சரஸ்வதி (வயது 76). இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 30 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண்களுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந்த கல்வி நிறுவனத்தை ராமானந்த் அரசிடம் ஒப்படைத்து விட்டார். இருந்தாலும் அவரே அக்கல்வி நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனத்தில் படித்த 2 இளம் பெண்கள் ராமானந்த் சரஸ்வதி தங்களை தகாத உறவுக்கு அழைப்பதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் போலீசில் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி