சென்னை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.‘கத்தி’ படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.இதில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.அனிருத் ஏற்கனவே 3 பாடல்கள் முடித்திருந்த நிலையில் இப்போது 4ம் பாடலையும் கம்போஸ் செய்து விட்டாராம். இது ஒரு ரொமாண்டிக் பாடலாம். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்குமாம்.
கத்தி திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக். அதில் அனிருத் நான்கு பாடல்களை முடித்துவிட்டதால் இன்னும் ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே பாக்கி. மீதமுள்ள அந்த ஒரு பாடலை விஜய் பாட உள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி