செய்திகள்,திரையுலகம் நர நாயகி (2014) திரை விமர்சனம்…

நர நாயகி (2014) திரை விமர்சனம்…

நர நாயகி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகிகள் மூன்று பேர். ஒருத்தி சாதுவானவள், மற்றொருத்தி கொஞ்சம் முரட்டுத்தனம் பிடித்தவள், மற்றொருவள் எதற்கும் அஞ்சாதவள். கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கியிடமிருந்து திருடிய நிறைய பொக்கிஷங்கள் ஒரு பாலைவனத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் நாயகிகளில் ஒருவருக்கு தெரிய வருகிறது. அவள் மற்ற இரண்டு பேரையும் அணுகி அந்த புதையல் வேட்டைக்கு அவர்களை தயார்படுத்துகிறாள்.

புதையலை தேடிச் செல்லும் இடத்தில் இவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்களுக்குள்ளும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையெல்லாம் தாண்டி அந்த புதையலை இவர்கள் கண்டுபிடித்தார்களா? கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கி யார்? என்பதை சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்து கவர்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்கள்.நாயகிகள் மூன்று பேரும் கவர்ச்சியில் ரொம்பவும் தாராளம் காட்டியிருக்கிறார்கள். இயக்குனர் இந்த படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் வைக்கவில்லை.

கவர்ச்சிக்கு இணையாக சண்டை காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. பாலைவனத்தில் நாயகிகள் கட்டிப்புரண்டு சண்டைபோடும் காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நாயகிகளில் ஒருத்தி போடும் வாள் சண்டை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு புதையலை தேடிச் செல்லும் கதையில், கவர்ச்சிக்கு அதிக அக்கறை காட்டிய இயக்குனர் கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நர நாயகி’ அபாயகரமான கன்னி…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி