சென்னை:-தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தற்போது இவர் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘கத்தி’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையின் சமந்தா தனது 27வது பிறந்த நாளை நேற்று கத்தி படப்பிடிப்பில் கொண்டாடினார். அவருக்காக ஸ்பெஷலான சாக்லேட் கேக் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டிருந்தது.அந்த கேக்கை படக்குழுவினர் மத்தில் சமந்தா வெட்டினார்.
அதில் ஒரு துண்டை எடுத்து விஜய், சமந்தாவுக்கு ஊட்டி தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதேபோல இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் அய்ங்கரன் கருணா உள்ளிட்டோரும் சமந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி