செய்திகள் சுறாவிடம் இருந்து நலவிரும்பியை காப்பாற்றிய டால்பின்கள்!…

சுறாவிடம் இருந்து நலவிரும்பியை காப்பாற்றிய டால்பின்கள்!…

சுறாவிடம் இருந்து நலவிரும்பியை காப்பாற்றிய டால்பின்கள்!… post thumbnail image
வெலிங்டன்:-அழிந்து வரும் டால்பின்கள் மற்றும் திமிங்கல மீன் வகைகளை காப்பாற்றி, பராமரித்து, பாதுகாப்பதற்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆடம் வால்க்கர் என்பவர் ஆபத்தான கடல் பகுதிகளை நீந்திக் கடந்து, சாகசம் செய்து நிதி திரட்டி வருகிறார்.

நியூசிலாந்தின் கடற்பரப்பில் உள்ள் குக்ஸ் ஜலசந்தி வழியாக 16 மைல் தூரத்தை நீந்திக் கடக்கும் சாகச நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடுக்கடலில் மிக நீளமான ராட்சத வெள்ளை சுறா ஒன்று அவரது காலுக்கு அடியில் நீந்தியவாறு மேல்நோக்கி வருவதை கண்ட ஆடம் வால்க்கர் நிலைகுலைந்துப் போனார்.

இந்நிலையில் வேகத்தில் நீந்தி வந்த சுமார் 10 டால்பின்கள் ஆடம் வால்க்கரை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தின.இதனை கண்டு பயந்துப் போன ராட்சத சுறா, நீந்தி ஓட்டம் பிடிக்க தொடங்கியது.பாதுகாப்பு அரண் போல டால்பின்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு காப்பாற்றிய காட்சிகள் அவரது படகில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த அரிய சம்பவத்தை வீடியோவுடன் தனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் ஆடம் வால்க்கர் பதிவு செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி