சென்னை:-‘தலைவா’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கி உள்ள படம் ‘சைவம்’. நாசர்,லுக்புதீன் பாஷா, சாரா நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான பின்னணி இசை ஹாலிவுட்டில் சேர்க்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கி உள்ளது.இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நல்ல படங்களை தேடிப்பிடித்து வாங்கி வருகிறது.
அந்த வகையில் சைவம் வாங்கியது குறித்து மகிழ்ச்சி. நல்ல கருத்தை சொல்லும் இந்தப் படத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல ரெட் ஜெயண்ட் வேகமாக செயல்படும். விஜய்யுடன் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி