சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா.
அஜித்,அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த யூனிட்டையும் வெளியேற்றி விட்டு, கேமராமேன் உள்பட வெகுசிலரை மட்டுமே வைத்து தனி அறைக்குள் படப்பிடிப்பு நடத்துகிறாராம் கெளதம்மேனன்.
அந்த காட்சிகள் யூனிட் மூலம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி படமாக்கும் கெளதம்மேனன், தனது உதவி இயக்குனர்களிடம்கூட அந்த காட்சிகள் பற்றி இதுவரை சொல்லவில்லையாம். அவர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருக்கும் யூனிட்டோடுதான் அமர்ந்திருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி