காதல் முறிந்ததால் மீண்டும் அப்படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். சிம்பு மேல் உள்ள ஆத்திரத்தில் அப்படத்தில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.தற்போது அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜுலியட் படங்களில் நடித்து வருகிறார்.இதில் ‘உயிரே உயிரே‘ படத்தில் கதநாயகனாக நடிக்கும் சித்தார்த்துக்கும் ஹன்சிகாவுக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன.இந்த காதல் குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
சித்தார்த்தை நான் காதலிக்கிறேன் என்பதில் உண்மை இல்லை. இது வதந்திதான். சித்தார்த் என் சக நடிகர் அவ்வளவுதான். அதை மீறி எதுவும் இல்லை. இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு எனக்கும், சித்தார்த்துக்கும் தொடர்பே இல்லை. நான் தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்கள் முழுக்க, சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. கேமரா முன்னால்தான் காதலிக்கிறேன்.இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி