ராஞ்சி:-ஜார்க்கண்டில் பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த கும்பல் ஒன்று அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயரதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், அதற்கு பின்னணி என்ன என்று தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி