செய்திகள்,திரையுலகம் பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…

பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…

பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, நஸ்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கியுள்ளார்.

அதோடு, இப்படத்திற்காக சிம்ரனை முதன்முறையாக ஒரு பாடலை பாடவைத்துள்ளார் பார்த்திபன். மேலும் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட கேட்டுள்ளார். அவரும் ஆடி தருவதாக கூறியிருக்கிறார்.ஆனால், தற்போது அவர் இந்தி படத்தில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு அந்த பாடலுக்கு நடனமாட முடியாது என தெரிவித்திருக்கிறார்.

இதனால், வேறு ஒரு நடிகரை அந்த பாடலுக்கு நடனமாட வைக்கலாம் என முடிவெடுத்த பார்த்திபன், தற்போது அந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனை ஆடவைக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி