1995ல் நோக்கியாவில் இணைந்த இவர் நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவிகள் வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2009 வரை நோக்கியாவின் சீமென்ஸ் நெட்வொர்க் பிரிவில் பணியாற்றினார். மேலும், இவர் குவைத், பின்லாந்து, லண்டன், நைஜீரியா, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இருந்துள்ளார்.
நீண்ட காலமாக லாபமின்றி இயங்கிக்கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட், ராஜீவ் சூரியின் செலவுகளைக் குறைத்த நிர்வாகத்தினால் கடந்த 2012ல் லாபப் பாதைக்கு திரும்பியது.ராஜீவ் சூரி இந்தியாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தவர். எம்.பி.ஏ. மற்றும் முதுகலை பட்டம் ஏதும் படிக்காமல் சாதனைகளை படைத்த மிகச் சில கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி